2025 பெப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்று தொடரை ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் கைப்பற்றிய நிலையில், ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், லுங்கி என்கிடி (2), நக்பயொம்ஸி பீற்றர் (2), பிஜோன் போர்ச்சுன், அன்டிலி பெக்லுவாயோவிடம் (2) விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 89 (94), ஏ.எம். கஹஸன்ஃபாரின் ஆட்டமிழக்காத 31 (15) ஓட்டங்களோடு 34 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஏய்டன் மார்க்ரமின் ஆட்டமிழக்காத 69 (67) ஓட்டங்களோடு 33 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், பரீட் அஹ்மட், மொஹமட் நபி, கஹஸன்ஃபார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் குர்பாஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X