2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியாவை வெல்லுமா இந்தியா?

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது மெல்பேணில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

அந்தவகையில் எஞ்சியிருக்கின்ற இரண்டு போட்டிகளிலும் வென்றாலே சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா நேரடியாகத் தகுதி பெற முடியுமென்ற நிலையில் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்த போட்டியில் காயமடைந்த ஜொஷ் ஹேசில்வூட்டுக்குப் பதிலாக அவுஸ்திரேலிய அணியில் ஸ்கொட் போலண்ட் களமிறங்குவாதோடு, நாதன் மக்ஸீவினிக்குப் பதிலாக சாம் கொன்ஸ்டாஸ் அறிமுகத்தை மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெவிஸ் ஹெட் உபாதைக்குள்ளாகியபோதும் அவர் குணமடைந்து விடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக இந்திய அணியில் மொஹமட் சிராஜ்ஜுக்குப் பதிலாக பிரசீத் கிருஷ்ணா விளையாடக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இதேவேளை அணித்தலைவர் றோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓட்டங்களைப் பெற வேண்டிய அழுத்தத்தில் உள்ளதோடு, யஷஸ்வி ஜைஸ்வாலும் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டியுள்ளார்.

மெல்பேண் ஆடுகளமானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகவே காணப்படுமென நம்பப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X