2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் ஸ்வியாடெக்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 22 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றுள்ளார்.

புதன்கிழமை (22) நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான எம்மா நவரோவை எதிர்கொண்ட போலந்தின் ஸ்வியாடெக், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம்நிலை வீரரான கார்லோஸ் அல்கரேஸை எதிர்கொண்ட ஏழாம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .