Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 24 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசங்களுக்கான லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ், நடப்புச் சம்பியன்களான ஸ்பெய்ன், ஜேர்மனி, போர்த்துக்கல் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
குரோஷியாவுடனான காலிறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது.
குரோஷியாவில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்ற பிரான்ஸ், தம்நாட்டில் திங்கட்கிழமை (24) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் மேலதிக நேர முடிவிலும் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று 2-2 என்ற மொத்த கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டது. பிரான்ஸ் சார்பாக மிஷெல் ஒலிஸே, உஸ்மான் டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் பெனால்டியில் பிரான்ஸின் தியோ ஹெர்ணாண்டஸும், ஜுலேஸ் கூன்டேயும் கோல் கம்பத்துக்குள் வெளியால் தமதுதைகளைச் செலுத்திய நிலையில், குரோஷியாவின் மார்டின் படுரினா, ஜோசிப் ஸ்டனிசிச்சின் உதைகளை பிரான்ஸின் கோல் காப்பாளர் மைக் மைக்னன் தடுத்ததோடு, பிராஞ்சோ இவனோவிச் தனதுதையை கோல் கம்பத்துக்குள் மேலால் செலுத்த 5-4 என்ற ரீதியில் வென்றே பிரான்ஸ் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதேவேளை நெதர்லாந்தை தமது காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்ட ஸ்பெய்னும் பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. நெதர்லாந்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய ஸ்பெய்ன், தம்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியையும் 3-3 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியிருந்தது. பெனால்டியில் நெதர்லாந்தின் நோவா லாங்கின் உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், ஸ்பெய்னின் லமீன் யமாலின் உதையை நெதர்லாந்தின் கோல் காப்பாளர் பார்ட் வெர்புரூக்கன் தடுத்திருந்தார். பின்னர் நெதர்லாந்தின் டொன்யெல் மலெனின் உதையை ஸ்பெய்னின் கோல் காப்பாளர் உனய் சிமியோன் தடுத்த நிலையிலேயே ஸ்பெய்ன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்ற முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஜேர்மனி, தம்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியபோதும் 5-4 என்ற மொத்த கோல் கணக்கில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதுதவிர, டென்மார்க்கில் நடைபெற்ற அந்நாட்டுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்ற போர்த்துக்கல், தம்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று, 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago