Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 13 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.
சக ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.
தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற றியல் மட்ரிட், அத்லெட்டிகோவின் மைதானத்தில் வியாழக்கிழமை (13) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.
அந்தவகையில் மேலதிக நேர முடிவில் 2-2 என்ற மொத்த கோல் கணக்கு சமநிலையில் காணப்பட்ட நிலையில், பெனால்டியில் 4-1 என்ற ரீதியில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் தகுதி பெற்றது.
பெனால்டியில் றியல் மட்ரிட்டின் கிலியான் மப்பே, ஜூட் பெலிங்ஹாம் தமதுதைகளை உட்செலுத்திய நிலையில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் அலெக்ஸான்டர் சொர்லொத் தமதுதையை உட்செலுத்திய நிலையில், ஜூலியன் அல்வரேஸ் தனதுதையை செலுத்தும்போது இரண்டு தடவைகள் காலால் தொடுகையுற்றதாக அவ்வுதை நிராகரிக்கப்பட்டது. பின்னர் றியலின் பெடெரிக்கோ வல்வெர்டேயும், அத்லெட்டிகோவின் ஏஞ்சல் கொரேராவும் தமதுதைகளை உட்செலுத்திய நிலையில், றியலின் லூகாஸ் வஸ்கூஸின் உதையை அத்லெட்டிகோவின் கோல் காப்பாளர் ஜான் ஓப்ளக் தடுத்திருந்தார். பின்னர் தனதுதையை அத்லெட்கோவின் மார்கோ லொரெண்டே கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்த, றியலின் அந்தோனியோ ருடிகர் தனதுதையை உட்செலுத்த 4-2 என்ற ரீதியில் றியல் வென்றது.
இதேவேளை பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியை வென்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய டொட்டமுண்ட், லில்லியின் மைதானத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று 3-2 என்ற மொத்த கோல் கணக்கிலேயே காலிறுதிப் போட்டிக்கு டொட்டமுண்ட் தகுதி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .