Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
10 அணிகள் பங்கேற்கும் 9வது ஐ.சி.சி மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமாகிறது.
பங்களாதேஷில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த குறித்த தொடர் அங்கு நிலவிய போராட்டம் காரணமாக பாதுகாப்பின்மையால் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது.
அதன் படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் டுபாய் ஆகிய இரண்டு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்று 3ஆம் திகதி முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை போட்டிள் நடைபெறவுள்ளன. கடந்த மகளிர் ரி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா 6வது தடவையாக சம்பியன் பட்டம் பெற்றது.
2024 ரி20 உலகக்கிண்ண தொடரில் குழு ஏ-யில் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும், குழு பி-யில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. இதுவரையில் 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடரில் 6 முறை சம்பியன் பட்டம் வென்று அவுஸ்திரேலியா அசத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
எனினும் இந்த முறை தொடரில் ஆசிய சம்பியன்களான இலங்கை மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக்கிண்ண தொடரை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள பல வீராங்கனைகள் உலகக்கிண்ண அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.34 மில்லியன் டொலரும், ரன்னர்-அப் (இறுதிப்போட்டியில் தோல்வியடையும்) அணிக்கு 1.17 மில்லியன் டொலரும், அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு 6 இலட்சத்து 75 ஆயிரம் டொலரும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாளில் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் - ஸ்கொட்லாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை இரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இறுதியாக ஆசியக்கிண்ண அரையிறுதியில் மோதியதில் இலங்கை அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம்
சாமரி அத்தபத்து (தலைவி), ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, ஹசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேசிகா ப்ரோபதினி, இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, இனோக்க ரணவீர, சஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago