2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

’’ஸ்வாஹிமானி’’ 2024 தேசிய விருதுகள்

Editorial   / 2024 நவம்பர் 09 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட "ஸ்வாஹிமானி" 2024 தேசிய விருதுகள் வழங்கும் பத்தரமுல்லை. சுகுறுபாயவில் வியாழக்கிழமை(07)  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தசாசம் சமயம், கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத் துறை அமைச்சின் செயலாளர்  ரஞ்சித் ஆரியரத்ன கலந்துகொண்டார். 

யாழ்ப்பாண மாவட்டம்  மூன்று விருதுகளை பெற்று தமிழ் மாவட்டங்களில் அதிக விருதுகளை பெற்ற மாவட்டமாக  பெருமை சேர்த்துள்ளது.

நல்லூர் பிரதேச வழிகாட்டல் குழு முதலாம்  இடத்தினையும், 50 இற்கும் குறைவான மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்திய நிறுவனமாக மாற்றுவலுவுடையோர் புனர்வாழ்வு நிறுவனம் (AROD)  இரண்டாம் இடத்தினையும், சிறந்த காட்சிப்படுத்தும்  மட்டத்திலான படைப்பாளியாக கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த .சுரேஸ்குமார் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.

இந் நிகழ்வில் அழைப்பாளராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான  மருதலிங்கம் பிரதீபன்  கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X