2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

Janu   / 2024 ஜூன் 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆசிரியர்கள், அதிபர்களால் புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து விட்டு வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள், அதிபர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் பதாதைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாத்தல், பெற்றோர்களின் கல்விக்கான பொருளாதார சுமையைக் குறைத்தல், இலவச கல்வியை தனியார் மயமாக்கல், அதிபர், ஆசிரியர், ஆசிரியர் ஆலோசகர்களின் நிலுவைச் சம்பளம் என்பவைகளின் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம் சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X