2025 மார்ச் 13, வியாழக்கிழமை

விமானப்படை போர்வீரர்களுக்கான நினைவேந்தல் மாதவழிபாடுகள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய் நாட்டிற்காக தன்னுயிர் நீத்த விமானப்படை போர்வீரர்கள் மற்றும் தற்போது சேவையில் உள்ள விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பௌத்த மத வழிபாடுகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில்   கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்க்ஷ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

யுத்தத்தின் போது தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த பௌத்த சமய நிகழ்வை விமானப்படை நலன்புரி பணிப்பகம்  ஏற்பாடு செய்து வருகின்றது.  இந்த பௌத்த மத விழாவின் முதல் நாளில் கிளன்பச பூஜையும் 02ம்  நாள்  ஏனைய  வழிபாடுகளும்  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி இனோகா ராஜபக்க்ஷ மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .