Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Editorial / 2023 ஜூன் 01 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் மறைந்த அந்தனி லோரஸ்னின் பூதவுடன், கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள மாயானத்தில் வியாழக்கிழமை (01) நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரது பூதவுடலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஸ்னண், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் மற்றும் கல்வியியலாளர்கள், எழுத்தாளர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
வியாழக்கிழமை (01) காலை 11 மணியளவில் அண்ணாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து ஹட்டனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு, கட்சியின் கொடி போர்த்தப்பட்டது. அதன் பின்னர் இரண்டு மணித்தியாலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனோடு இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்ட அந்தனி லோரன்ஸ் தனது 71வயதில் அமரத்துவம் அடைந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago