2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Janu   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி இராமநாதபுரம் பிரதேசத்தில், தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு  சமத்துவ கட்சியின் உறுப்பினர்களால் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று உலருணவுப்பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஏற்பாட்டில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு பொதிகள் மற்றும் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது.

வி.ரி.சகாதேவராஜா

நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பரிந்துரையின்படி  சுமார் 1 மில்லியன் பெறுமதியான தாய்-சேய் நலத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை(1) மாலை    சமூக, பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான அமைப்பின் (OSEED) ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டது.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X