2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரிசைக்கு வந்த கேன்கள்

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக, வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நிற்கின்றன. அத்துடன், சிற்சில இடங்களில் மனிதர்களும் நிற்கின்றன.

பொலன்னறுவை, அரலகங்வில, செவனபிட்டி, வெலிகந்த, சிறிபுர, உள்ளிட்ட நகரங்களிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள்கள் இல்லை.

எனினும், மன்னம்பிட்டிய எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு எரிபொருள் பவுசர் வருவதாக நேற்று (02) மாலை தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவல் கிடைத்தவுடன், வாகன சாரதிகள், விவசாய இயந்திரங்களை வைத்திருப்போர், வெற்று கேன்களை வீதியோரத்தில் வைத்துக்கொண்டு பவுசருக்காக காத்திருந்தனர்.

இதற்கிடையில், இரண்டொரு சாரதிகள் தாங்கள் இரண்டு, மூன்று நாட்களாகவே அங்கு நின்றுக்​கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .