2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

வசந்த உதயம் புத்தாண்டு விழா...

Mayu   / 2024 மே 06 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா வசந்த உதயம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு- 4  பொலிஸ் பார்க் மைதானத்தில் நிறுவனத்தின் தவிசாளர். வி.ஜனகன் தலைமையில் சனிக்கிழமை (04)  இடம்பெற்றது.

இவ் விழாவில் உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், பிரித்தானிய எட்ஹாட் சர்வதேசத்தின் முதன்மை கல்வியாளர்.அலன் கிளர்க், மற்றும் அவரது பாரியார் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந் விழாவின் அதிதிகளாக  சிரிஷ்ட பொலிஸ்  அத்தியோச்சகர்.ஜகத் ரோஷன் டயாஸ் மற்றும் அவரது மனைவி, சட்டத்தரணி மேரி டி. டிக்மன், கல்வி அமைச்சின் திறன் வளர்ச்சி நிதியத்தின்  தலைவரும் ஆகியோர்  பங்கு பற்றி இருந்ததுடன்   பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும்  விளையாட்டுக்களில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X