2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

யாழ்.இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் நிகழ்வு

Editorial   / 2025 ஜனவரி 26 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

இந்தியாவின் 76வது குடியரசு தினம், வெகு விமர்சையாக ஞாயிற்றுக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி    யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நிகழ்வுகள் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.   துணைத் தூதுவரால் இந்திய தேசிய கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குடியரசு தின வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. இந்திய தேசபக்திப் பாடல்கள், நடனங்கள் கவிதைகள் என்பன ஆற்றப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X