2025 மார்ச் 13, வியாழக்கிழமை

யாழில் போராட்டம் காரணமாக அமைதியின்மை

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்டு கை ஒன்று அகற்றப்பட்ட  8 வயதுச் சிறுமிக்கு   நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று  வியாழக்கிழமை (07) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது. மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .