Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 மே 01 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பிரதேச ரீதியாக தொழிலாளர் தினத்தை அனுஷ்டித்து வருகின்றது.
ரஞ்சித் ராஜபக்ஷ...
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் (ஹட்டனில்)
அக்கரப்பத்தனை பெரிய நாகஸ்தன்னையில் இ.தொ.கா (துவாரக்ஷான்)
வவுனியாவில் மேதின ஊர்வலம்…
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பிரதான மேதினக்கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்று (01) காலை இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதிவழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா மாநகர மண்டபத்தை அடைந்தது. அங்கு மேதினக்கூட்டம் இடம்பெற்றது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.பகிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன், வன்னிமாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன், சமூகநீதிக்கான வெகுஜனஅமைப்பின் இணைத்தலைவர் பூ.சந்திரபத்மன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே.ஜிந்திசன், தொழிற்சங்கம் சார்பாக க.மகேந்திரன்,பெண்விடுதலைச்சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி, ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர். க. அகரன்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே.தின வழிபாடு...
பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01) தனது 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
58 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், மே தினத்தையொட்டியும் ஹட்டன் சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன்பின்னர் கட்சி தலைமையகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, 'கேக்'வெட்டப்பட்டு கொண்டாட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொது செயலாளர் பிலிப், நிதிச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். (எஸ்.கணேசன்)
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மே.தினம்…
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றுவருகிறது.
குறித்த மேதின ஊர்தி பவனியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்பவற்றுக்கெதிராக அடையாளங்களை தாங்கிய ஊர்தியுடன் வருகைதந்த மக்கள் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,தமிழர் கடல்,நில வளங்களை சுரண்டாதே ,இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்
அங்கு மக்கள் மத்தியில் மேதின பிரகடனம் வாசிக்கப்பட்டது குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் மற்றும் சட்டத்தரணி காண்டீபன், மற்றும் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மற்றும் இளைஞர் மற்றும் மகளிர் அணி தலைவர்கள், கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட இணைப்பாளர்கள் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்
சண்முகன் தவசீலன்
இராகலையில்…
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி அதன் மேதின நிகழ்வை கட்சியின் முன்னாள் பிராந்திய செயலாளர் சிவ. இராஜேந்திரன் தலைமையில் இராகலை நகரில் இடம்பெற்றது. (ஆ.ரமேஷ்)
பதுளையில்…
இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் மேதின பேரணி பதுளை நகரில் அதன் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது ( எம். செல்வராஜ்)
ரி.எம்.வி.பியின்பேரணி ...
இன்று 138வது மே தினமாகும். உலக தொழிலாளர் தினமான இன்று (01) மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரிஎம்விபி) கட்சி ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மேதின பேரணி இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு நகரிலிருந்து களுதாவளை நோக்கிச்சென்றது. ரீ.எல்.ஜவ்பர்கான்
இ.தொ.ஐ.மு…
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தலைமையில் நுவரெலியா மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மே தின ஊர்வலம் நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு அருகில் ஆரம்பித்து நுவரெலியா பொது நூலக கேட்பொர் கூடத்தை சென்றடைந்தது . (எஸ். கே. குமார், ஆர். ரமேஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago