2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

முப்பெரும் விழா….

Janu   / 2024 ஜூன் 30 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா, பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம். எம்.எம்.  இர்ஷாத் தலைமையில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்றது.

நிகழ்வின் அதிதிகளாக நீர்கொழும்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நிஷானி சந்திரசேன, கட்டான கோட்டக் கல்வி பணிப்பாளர் எம். ஏ. ஆர். பி. கே. குணத்திலக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

  நிகழ்வின் ஆரம்பத்தில்  விஞ்ஞான ஆய்வுக்கூடம் மற்றும் கணினி ஆய்வு கூடம் என்பன திறந்து வைக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து பாடசாலை பிரதான மண்டபத்தில் நிகழ்வு இடம் பெற்றது.

நிகழ்வில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெளிவாகியுள்ள  மாணவர்கள் மூவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டுதல் நிகழ்வு இடம் பெற்றது.மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம் பெற்றன.

எம்.இஸட். ஷாஜஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X