2025 மார்ச் 13, வியாழக்கிழமை

முச்சக்கர வண்டி சங்கத்தினர் போராட்டம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் - முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கி​ழமை (11) கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரியுமே இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி, யாழ். நகரில் உள்ள வீதி வழியாக வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்து நிறைவுபெற்றது.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .