2025 ஜனவரி 29, புதன்கிழமை

மீலாதுன் நபி விழா...

Janu   / 2024 நவம்பர் 12 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த மீலாதுன் நபி விழா கல்லூரி அதிபர்  அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் திங்கட்கிழமை (11) அன்று சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரத்துறை தலைவர் பேராசிரியர் எம் .எம். பாசில் கலந்து சிறப்பித்தார்.  கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுள்ளா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதேவேளை பிரதான பேச்சாளராக ஏறாவூர் ஐம்மியத்துல் உம்முல் அறபிக் கல்லூரி அதிபர் ஏஎச்எம்.சாதிக் மௌலானா கலந்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.  

வி.ரி.சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .