2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

மாவீரர் நினைவேந்தல்…

Editorial   / 2024 நவம்பர் 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் புதன்கிழமை (27 )  மாலை நினைவேந்தல் நிகழ்வு எழுச்சியுடன்  உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 

 858 மாவீரர்கள் துயிலும் இல்லத்திற்குப் பொறுப்பான  அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர்  சின்னத்தம்பி சுப்பிரமணியம், செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை( குட்டிமணி மாஸ்டர்) ஆகியோரும் பணிக்குழுவினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வில் ஏ.கே. கோடீஸ்வரன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமூக செயற்பாட்டாளர்களான டாக்டர் ஜெயம், காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், சமூக செயற்பாட்டாளர் கணேஸ், பவா அண்ணன் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் ஆயிரம் மாவீரர் பெற்றோர்கள் கலந்து கொண்டு சரியாக மாலை 6. 05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தலை உணர்வு பூர்வமாக நடாத்தினர். செல்லும் வழியில் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பு படையினரால் பதிவு செய்யப்பட்டன.

வி.ரி.சகாதேவராஜா

திருகோணமலை மாவட்டம் , மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால்  சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் புதன்கிழமை (27)  இடம்பெற்றது. 

அச்சுதன்

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் புதன்கிழமை (27)  மாலை 06.05  இடம்பெற்றது 

இதன்போது இரண்டு மாவீரர்களின் தாய் பொது சுடரேற்ற, மாவீரர்களின் உறவுகளும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிதர்ஷன் வினோத்

 

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள்,மத தலைவர்கள் .முன்னாள் போராளிகள், பொது மக்கள் எனபெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் 

சண்முகம் தவசீலன்

தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் புதன்கிழமை ​(27) மாலை உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றது. 

மாவீரர் பெற்றோர்கள் சாட்டி மாதா ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .