2025 மார்ச் 13, வியாழக்கிழமை

மார்க் ஆண்ட்ரே யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Janu   / 2023 செப்டெம்பர் 06 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின்  நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு திங்கட்கிழமை  (04 ) விஜயம் செய்ததுடன் செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.

அரசாங்க அதிபருடனான சந்திப்பு 

ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும்   இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை  தொடர்பான விரிவான  கலந்துரையாடல் இன்றையதினம் (05) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில்  மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் 

ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை சந்தித்தார்.

யாழ்ப்பாண கோட்டைக்கு விஜயம் 

யாழ்ப்பாணப் கோட்டைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அங்கிருந்து யாழ்ப்பாண நகரத்தின் அழகை பார்வையிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .