2025 ஜனவரி 29, புதன்கிழமை

மாபெரும் பேச்சு போட்டி

Janu   / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினரால்  ஞாயிற்றுக்கிழமை (27) காலை 8:30 மணி தொடக்கம் 3:00 மணி வரை மாபெரும் பேச்சு போட்டி  நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் 220 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து தனது பேச்சாற்றலை வெளிப்படுத்தினார்கள். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப் போட்டியில் வெற்றி பெற்ற முப்பது மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் கதைப்புத்தகம் மற்றும் சான்றிதழ் உட்பட முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசும் வழங்கப்பட்டது.

மேலும், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தால் "நூல் கொண்டு நிமிர்' எனும் தொனிப்பொருளில் மாணவர்களின் வாசிப்பு  மேம்படுத்தும் நோக்கிலான செயலமர்வானது  பத்துப் பாடசாலைகளில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .