2025 மார்ச் 13, வியாழக்கிழமை

மன்னாரில் உறவுகள் போராட்டம்…

Editorial   / 2023 ஜூலை 07 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை(7) காலை 11 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வேண்டும்,வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்”,“எங்கே எங்கே உறவுகள் எங்கே”?,“வீடுகளில் வைத்து கொண்டு சென்ற உறவுகள் எங்கே”?,”வெள்ளை வேனில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே”?,“ஓ.எம்.பியும் வேண்டாம்”,“2 இலட்சமும் வேண்டாம்”,“சரணடைந்த உறவுகள் எங்கே”? உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .