2024 நவம்பர் 23, சனிக்கிழமை

மண்டூர் முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.சக்தி 

“சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி  பெற்ற மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று (10) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

முருகனின் அற்புத வீடுகளில் ஒன்றானக கருதப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.

உலகிலேயே முருக வழிபாட்டில் தனித்துவமான முறையினையும் மிகவும் பழமையான வழிபாட்டு முறையினையும் கொண்டதாக பூஜை முறைகளும் ஆலய நடைமுறைகளும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் உள்ளது.
 
இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வேல்தாங்கிய பேழைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பேழைக்கு ஆலயத்தினுள் சிறுமி ஒருவரும் தீபம் காட்டி வழிபாடுகளை முன்னெடுத்த பின்னரே பேழையானது தீர்த்தக்கரை நோக்கி கொண்டு செல்லப்பட்டது.

பெருமளவான பக்தர்கள் அடியார்கள் புடைசூழ மட்டக்களப்பு வாவிக்கு அருகில் உள்ள தீர்த்தக்கேணிக்கு முருகனின் வேல்தாங்கிய பேழை கொண்டுவரப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தீர்த்தோற்சவம் நிறைவடைந்ததும் ஆலயத்திற்கு முருகப்பெருமானிக் பேழை கொண்டுவரப்படும்போது தெய்வானையம்மன் ஆலயத்திற்கு முன்பாக சிறுமிகள் தீப ஆராதனை செய்யும் நிகழ்வு நடைபெறும்போது சிறுமிகள் மற்றும் வில்அம்பு தாங்கி வரும் சிறுவன் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.

மயங்கிய சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பிற்புறமாக கொண்டுசெல்லப்பட்டு முருகப்பெருமானின் வேல் வள்ளியம்மன் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டது. இதன்போது வள்ளியமனுக்கு தீர்த்தம் தெளிக்கும் சமயத்தில் மயங்கிய பிள்ளைகள் மயக்கம் தெளிந்து எழும் அற்புத காட்சியும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X