2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

மக்களின் பேரெழுச்சியால் முடங்கியது ஏ-9 வீதி

Mayu   / 2024 ஜூலை 08 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் திங்கட்கிழமை (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.

இதில் பொதுமக்கள் தமது எதிர்ப்பு கோஷசம் மிட்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வருகை தராத நிலையில் பொறுமையிழந்த பொதுமக்கள் ஏ-9 வீதியை முடக்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து முற்றாக முடங்கியது. பின்னர் பொலிஸார் போராட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் வீதி முடக்கம் கைவிடப்பட்டதுடன் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த காவல்துறையினர் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யாமையும் குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன், நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .