2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பொலிஸாரின் பலத்த கெடுபிடிக்கு மத்தியில் போராட்டம்

Mayu   / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

 76வது தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
76வது தந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் நாட்டில் தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் வழங்காததால் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு வட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு கிழக்கு வலிந்துகாணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


 
குறித்த போராட்டம் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி காந்திபூங்கா வரையில் சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பது என திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவிருந்த நிலையில் அங்கு அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பொலிஸாரினால் வீதிகள் மறிக்கப்பட்டதுடன் கலகமடக்கும் பொலிஸ் பிரிவு, கண்ணீர்ப்புகை தாக்குதல் நடாத்தும் வாகனங்கள் போன்றன வீதியில் நிறுத்தப்பட்டு வீதியில் தடைகளும் போடப்பட்டிருந்தன.


 
மேலும் காந்திபூங்கா மற்றும் வெபர் மைதானங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதன் காரணமாக பேரணி செல்லவோ, போராட்டம் நடாத்தவோ முடியாது என 14 நபர்களுக்கு பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளனர். இவ்விடயம் குறித்து கைதுசெய்யப்படுவார்கள் என ஒலிபெருக்கி மூலமும் இதன்போது அறிவித்தனர்
 
பலத்த மழைக்கும் மத்தியிலும், பொலிசாரின் பலத்த கெடுபிடிக்கு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


 
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்க உறுப்பினர்கள், வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .