Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளை தடுக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (07) காலை பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணி வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியிலிருந்து கண்டிவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து மாவட்டசெயலகம்வரை சென்றடைந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள்:
பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் பொருட்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரையான 16 நாட்கள் செயல்வாத விழிப்புணர்வு ஒன்றை நடைமுறைப்படுத்திவருகின்றோம்.
குறிப்பாக உலகில் அதிகமான வன்முறைகளுக்கு உள்ளாகும் தரப்பாக பெண்களே உள்ளனர். அவர்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் வீட்டினுள்ளே முடங்கிக்கிடக்கும் நிலை தற்போது காணப்படுகின்றது. எனவே வன்முறைகளை தடுத்து அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago