Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய மீனவ கொள்கை சட்டத்திற்கெதிராக கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் (14) மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மீனவர்களின் ஏற்பாட்டில்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் அனுசரணையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்துகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்று காரணமாக கடற் தொழில் சமூகத்தை பெரிதும் பாதிப்படைய வைத்திருந்தது. இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற் தொழில் சமூகத்தை மேலும் பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி மீனவ சமூகத்திற்கு முடிவு வழங்குமாறு கோரி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த பல வருடங்களாக இந்திய இழுவை படகுகளின் வருகையால் பாதிக்கப்பட்டு வரும் வட இலங்கை கடற் தொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன் வைத்து குறித்த கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.றொசேரியன் லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago