2025 மார்ச் 13, வியாழக்கிழமை

புதிய பிரதேச செயலகங்கள் திறந்து வைப்பு

Janu   / 2023 மே 29 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (29.05.2023) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், கிராம, சமூர்த்தி, நலன்புரி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .