Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன.
இந்தக் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (08) இடம்பெற்றது.
“பிளவுபடாத ஐக்கிய நாட்டுக்குள் சகலருக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டுமென்ற கோட்பாட்டின்” பிரகாரம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகரவின் தரப்பு உட்பட 08 கட்சிகள் கூட்டணியின் பிரதான பங்காளிகளாக உள்ளன.
அத்தோடு, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டுள்ளார்.
அதேபோன்று பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் எம்.பிகளும், பல்வேறு சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago