Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 02 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 01ம் திகதி உலக முட்டாள்கள் தினம். இத்தினத்தில் இன்னமும் புகைக்கும் உங்களில் சிலருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எனும் தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்னமும் ஏமாந்து முட்டாள் தனமாக புகைப்பவர்களுக்கு இதன் மூலம் பொருத்தமானதும், விளங்கிக்கொள்ள இலகுவானதுமான விழிப்புணர்வு தகவலை வழங்கி அவர்களின் பாவனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறானதொரு தகவல் பரிமாறப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வாழ்த்தை பெறாமல் இருப்பதற்கு முயற்சிகளை எடுக்குமாறும் தற்போது புகைத்தலிற்கு ஏமாறாமல் இருப்பவர்கள் அதனை தக்க வைத்துக்கொள்வதற்கும் இவ்வாறான விழிப்புணர்வு செயற்பாடுகள் நடாத்தப்படுகின்றன.
குறிப்பாக யாழ் நகரம், ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகரில் இளைஞர்கள் இணைந்து இன்றைய தினம் வித்தியாசமான முறையில வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதனை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
43 minute ago