2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

பாராளுமன்றில் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் திங்கட்கிழமை (17) காலை பாராளுமன்றத்தில் கூடினர்.

இந்த விசேட கூட்டத்தில் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் தேர்தல் மேடையில் வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றியுள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உந்துதல் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், ​​மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், இராசமாணிக்கம் சாணக்கியன், கயந்த கருணாதிலக்க, ரோஹித அபேகுணவர்தன, அனுராதா ஜயரத்ன,

எஸ். ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, வி. இராதாகிருஷ்ணன், பத்மநாதன் சத்தியலிங்கம், ஜே.சி.அலவத்துவல, சாமர சம்பத் தசநாயக்க, ரவி கருணாநாயக்க, டி.வி சானக்க, காதர் மஸ்தான், முஹமது இஸ்மாயில் முத்து முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X