2025 மார்ச் 13, வியாழக்கிழமை

பாடசாலையின் நுழைவாயிலை மூடி போராட்டம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

  மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி கோனாவில் மகாவித்தியாலயத்தில்  காணப்படுகின்ற பாடரீதியான ஆசிரிய வெற்றிடங்களை உடன் நிவர்த்தி செய்யக்கோரி மாணவர்களின் பெற்றோர்களால் இன்று (12) காலை பாடசாலையின் நுழைவாயிலை  மூடி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 450 வரையான மாணவர்கள் கல்வி கற்று வரும்  பாடசாலையில் 32 ஆசிரியர்கள் தேவையானபோதும் 22 ஆசிரியர்கள் மாத்திரமே  கடமையாற்றி வருகின்றனர்

இதற்கமைய சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனையின் (கல்வி அபிவிருத்தி பிரிவு) பிரதிக் கல்வி பணிப்பாளர் பரஞ்ஜோதி பரணீதரன் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் பெற்றோர்களின் எதிர்ப்பு கடுமையாக காணப்பட்டது.

இதனை அடுத்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்கும் வரை வலயக் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த பாடங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்று எழுத்துமூல வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து  குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .