2025 மார்ச் 13, வியாழக்கிழமை

பண்டார வன்னியனின் 220வது ஞாபகார்த்த விழா...

Editorial   / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியவீரன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220வது ஞாபகார்த்த விழா இன்று (25/08/2023) காலை 09.30 க்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இடம்பெற்றது. 

இதன்போது பண்டாரவன்னியனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது.  

வவுனியா நகரசபைசெயலாளர் பூ. செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், முன்னாள் உள்ளூராட்சிமன்ற தலைவர்களான இ.கௌதமன், சு. ஜெகதீஸ்வரன், மற்றும் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

க. அகரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .