2024 நவம்பர் 02, சனிக்கிழமை

ப​றவைகளின் படையெடுப்பு...

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, மத்தியமுகாம், சவளக்கடை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் உள்ள நீர்  நிலைகளை நாடி வெளிநாட்டு  பறவை இனங்கள் தற்சமயம் வருகை தருகின்றன.

இப்பறவைகள் சுமார் 2,000 மைல்  தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. அவுஸ்ரேலியா, சுவிஸ்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜரியா மற்றும் சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து டிசெம்பர் மாதத்தில் இங்கு வருகின்றன.

இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கூழைக்கடா, பாம்புத்தாரா, சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள், அன்னப்பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றன.

இவை இங்கேயே கூடு கட்டித் தங்கி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக்கொடுத்து, மார்ச் மாத இறுதியில் புதிய குடும்பமாய் தமது சொந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழமையாகும்.

இந்த வெளிநாட்டுப் பறவைகள் யாவும் இயற்கை சூழலைப் பாதுகாப்பதிலும் வேளாண்மை செய்கைக்கு உதவுவனவாகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் - பாறுக் ஷிஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .