Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 12, புதன்கிழமை
Mayu / 2024 மார்ச் 13 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலில் ரமழான் மாதத்தின் முதல் நாள் புனித நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுனர் ஏற்பாட்டில் எதிர்வரும் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணம் தழுவியதான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு தொடர்பாக ஆராயும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (12) மாலை கிழக்கு நடைபெற்றது.
இதையடுத்து காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்.
இதில் அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஜவாஹிர் பலாஹி உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago