Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நான்காவது திறன் வகுப்பறை வெள்ளிக்கிழமை (08) மு.ப. 9:00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் பா. பாலசுப்பிரமணியம் தலைமையில் இத்திறப்பு விழா நடைபெற்றது.
வித்தியாலயத்தின் பழையமாணவர் ந. சண்முகதாஸின் (இலண்டன்) நிதி உதவியின் கீழ் தனது பெற்றோராகிய அமரர்கள் திரு. திருமதி நவரட்ணம் பொன்னம்மா ஞாபகார்த்தமாக நான்காவது நவீன திறன் வகுப்பறை அமைக்கப்பட்டது.
வலிகாமம் வல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. மதியழகன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இத்திறன் வகுப்பறையின் திறன் பலகையை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி ச. சிவமலர் திரைநீக்கம் செய்து வைத்தார். திறன் பலகையை பாடசாலையின் அதிபர் பா. பாலசுப்பிரமணியம் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
38 minute ago
2 hours ago