Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சோபகிருது வருட (2023) மஹோற்சவத்தினை முன்னிட்டு பந்தல்கால் நாட்டலும், காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வயானைக்கு கிரியைகள் இடம்பெற்றன. அதனையடுத்து காளாஞ்சியானது மரபுரீதியான செங்குந்தா பரம்பரையினருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் காலை 07.50 சுபநேரத்தில் ஆலய வெளிவீதி சுற்றுவட்ட பகுதியில் சம்பிரதாயபூர்வமாக ஆலயபிரதமகுருவினால் பந்தல்கால் நாட்டிவைக்கப்பட்டது.மஹோற்சவ கொடிச்சீலையினை பரம்பரையாக வரைந்து கொடுப்பவர்களுக்கான காளாஞ்சியினை கையளிப்பதற்காக, ஆலய உழவர் வண்டிமூலம் நல்லூர் பின்வீதியுடாக சென்று சட்டநாதர் வேல் முருகன் ஆலயநிர்வாகத்தினரிடம், ஆலய பிரதம குருகளாகிய சிவஸ்ரீ வைகுந்தன், பிரசன்னா ஆகிய குருக்கள் தலைமையில் காளாஞ்சி மற்றும் மஹோற்சவ விஞ்ஞானபம் கையளிக்கப்பட்டது.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago