2025 மார்ச் 13, வியாழக்கிழமை

நடமாடும் சேவையால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு

Freelancer   / 2023 மே 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் நடமாடும் சேவை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை காரைதீவு பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமுர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல் ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி,  தேசிய அடையாள அட்டை, பொலிஸ், தேசிய வீடமைப்பு அதிகார சபை, மின்சார சபை, கமநல சேவைகள் நிலையம், வனவிலங்கு, பதிவாளர் திணக்களம் மற்றும் கமநல சேவைகள், சுகாதாரம் போன்ற திணைக்களம் மற்றும் பிரிவுகள்  கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது மக்கள் நடமாடும் சேவை இன்று(17) புதன்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம் பெற்றது. இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல்  ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி,  தேசிய அடையாள அட்டை,  பொலிஸ் ,தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள்  கலந்து கொண்டு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .