2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

தொடர்மாடி கட்டிடத்திற்கு நிதியுதவி

Mayu   / 2024 ஜூன் 02 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மொரட்டுவ சொய்சாப்புர பிரதேசத்தில் அமைந்துள்ள சீ தொகுதி  தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் ஒரு பகுதி சேதம் அடைந்த  நிலையில் அங்கு வசிக்கும் 64 குடும்பத்தினரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனை ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனால் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அங்கு சனிக்கிழமை(01) அவ்விடத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், கட்டிடத்தை உடனடியாக புனர் நிர்மாணம் செய்வதற்காக ஒரு தொகை நிதி உதவியினையும்  வழங்கி வைத்துள்ளார்.

இன் நிகழ்வில் ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும்,அக் குடியிருப்பில் உள்ள மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X