Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யா/ நடேஸ்வரக் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினராலும் ரட்ணம் பவுண்டேஷன் நிறுவனத்தாலும் அன்பளிப்பு செய்யப்பட்ட திறன் வகுப்பறை திறப்பு விழா கடந்த புதன்கிழமை (20) அன்று பாடசாலையின் முதல்வர் கு. விமலன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயப் பிரதி கல்விப் பணிப்பாளர் சி. ஸ்ரீ குமரன், சிறப்பு விருந்தினராக லண்டன் பழைய மாணவர் சங்க உறுப்பினர் செ. சண்முகநாதன், கௌரவ விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் திரு சு. கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கல்லூரியின் முதல்வர் தனது உரையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் இப்பாடசாலையானது பழைய மாணவர்களினதும் கல்வித் திணைக் களத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவித் திட்டங்களுடன் வளங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு வளர்ந்து வருகின்றது எனக் குறிப்பிட்டார்.
பிரதம விருந்தினர் தனது உரையில் பாடசாலையின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டதுடன் அடிப்படை வளங்கள் ஓரளவு கொண்ட பாடசாலையாக யா/நடேஸ்வரக் கல்லூரி திகழ்கின்றது எனவும் இவ் வளங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் பயனுடைய வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்
சிறப்பு விருந்தினர் தனது உரையில், பாடசாலையின் வளர்ச்சிக்காக தம்மால் இயன்ற உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு தொடர்ந்து தங்களது உதவி பாடசாலைக்கு கிடைக்கும் என உறுதி அளித்தார்.
கௌரவ விருந்தினர் தனது உரையில், இவ்வாறான நவீன கற்பித்தல் முறைகள் புகுத்தப்படுவதன் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் நவீன கற்றல் கற்பித்தல் முறைகளுடன் இணைந்ததாக தமது கல்விச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்தோடு புதிதாக நிறுவப்பட்ட திறன் பலகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதிரி வகுப்பெடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
14 minute ago
2 hours ago