2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

தாய்லாந்துக்கு பறந்தது ’’முத்து ராஜா’’

Editorial   / 2023 ஜூலை 02 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு இன்றைக்கு  22 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து வழங்கியது "முத்து ராஜா" அல்லது "சக்சுரின்" யானை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (02)  அதிகாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அந்த யானை கொண்டு வரப்பட்டது.

       தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து யானையை            அதிகாலை சுமார் 12:00 மணியளவில்,   யானையை மிகவும் மெதுவாகவும், எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது விசேட வாகனம் அழைத்து வந்தது.

          இந்த யானை அடங்கிய சிறப்பு கூண்டு  தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லும் ரஷ்ய "இல்லூஷன்-76" விமானத்தில் காலை 4.30 மணிளவில் ஏற்றத் தொடங்கியது.

             இந்த விமானம் காலை 07.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள "Xianmai" விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

4 ஆயிரம் கிலோகிராம் நிறையைக் கொண்ட அந்த யானையை கொண்டுச் செல்வதற்காக ஒருவழி செலவாக 7 இலட்சம் டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தாய்லாந்து தெரிவித்துள்ளது.

முறையாக பராமரிக்காமையை அடுத்தே அந்த யானை நோய்வாய்ப்பட்டது என்றும், யானையை தங்களுக்கு திரும்பித்தருமாறு தாய்லாந்து இலங்கையிடம், 2022 ஆம் ஆண்டே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .