2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

தாக்குதலுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

Mayu   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

மட்டக்களப்பில் தனியார்  பேருந்து  சாரதி  மற்றும்  நடத்துனர்களினால்  இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்புச்சாலை பஸ்சாரதி தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டி இன்றைய தினம் (20) களுவாஞ்சிகுடி சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாடு தொடர்பாக இது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும்  இலங்கை போக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிகுடி போக்குவரத்து சாலை ஊழியர்கள்  தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை இன்று எடுக்கப்படாவிட்டால் பணிபகிஸ்கரிப்பு  தொடரும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .