2024 நவம்பர் 02, சனிக்கிழமை

தமிழ்நாட்டின் அன்பளிப்பு...

Editorial   / 2022 ஜூலை 26 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டு அரசாங்கம் மற்றும் மக்களாக இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்றாவது தொகுதி, உதவிப்பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில் வைத்து இன்று (26) கையளிக்கப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் தலைமையிலான தூதரக அதிகாரிகளால், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தலைமையிலான குழுவினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அந்த உதவிப் பொருட்களில்,  40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய 22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் அடங்கியிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .