Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Simrith / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகிறது, 700,000 அரச துறை ஊழியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அரச மற்றும் இராணுவ வீரர்கள் வாக்களிக்க செப்டம்பர் 4 முதல் 6 வரையான திகதிகளை தேர்தல் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது.
இன்று நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. பிரதான காலத்தில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய கூடுதல் நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புத்தளத்தில் ...
எம்.யூ.எம் சனூன்
நுவரெலியாவின் மாவட்டத்தில் 19,747 அரச அதிகாரிகள் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் காலை நேர கடமைகள் நிறைவடைந்த பின்னர் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு தகுதியுடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் .
மட்டக்களப்பில்...
ரீ.எல் ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13116 பேர் தபால் மூல ம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஜே. ஜே . முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய பொலிஸார் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்தனர்.
காத்தான்குடியில்...
எம் .எஸ். எம். நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. இதில் 96 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்களிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago