2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

தந்திரிமலையில்...

Freelancer   / 2024 ஜூன் 21 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசான் பௌர்ணமியை முன்னிட்டு 21 ஆவது தடவையாக விஜய நியூஸ்பேப்பர் கம்பனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தந்திரிமலை ரஜமஹா விகாரையின் பூஜை நிகழ்வுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

இன்று பிற்பகல்  தந்திரிமலை ரஜமஹா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதியை, வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் உப பிரதான சங்கநாயக, தந்திரிமலை ரஜமஹா விகாரிபதி வண, தந்திரிமலை சந்தரதன  தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து   ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் தீபங்கள் ஏற்றி வைத்து தந்திரிமலை  பூஜை நிகழ்வுகள்  ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதேவேளை, பொசான் பௌர்ணமியை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தந்திரிமலை புனித பூமிக்கு வருகை தந்திருந்தவர்களை  ஜனாதிபதி நேரில் சென்று சந்தித்ததுடன் அவர்களிடம் தகவல் கேட்டறிந்துகொண்டதுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X