Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 07 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 54ஆவது நினைவு தினம் தங்காலை மஹவெல வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது.
புவக்தண்டாவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகள் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு கீதத்தை இசைத்தனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ,எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, டீ.வீ.சானக, ஜானக வக்கும்புர, தேனுக விதானகமகே, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே ஆகியோர் டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செய்தனர்.
டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு தின குழுவின் சார்பில் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கபில திசாநாயக்க மற்றும் பிரதான பிரதி செயலாளர் உபுல் திசாநாயக்க மற்றும் தென் மாகாண சபையின் தவிசாளர் சோமவங்ஷ கோதாகொட ஆகியோர் டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.
தங்காலை வகேகொட புராதன வஜிரகிரிய விஹாராதிபதி மிரிஸ்ஸே தம்மவங்ஷ தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.
கசாகல ரஜமஹா விஹாராதிபதி தலம்பொருவே இந்திரசிறி சுமன தேரர், தங்காலை பொலொம்மாருவ வனவாச குடா விஹாரையின் மஹாதிகாரி தம்மதின்ன மஹபிரிவெனாவின் குருத்யாதிகாரி மண்டாடுவே தீரானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டனர்.
வீரகெடிய மெதமுலனவிலுள்ள டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் தோன தந்தினா சிமரசிங்க திசாநாயக்க ஆகியோரது நினைவிடத்திற்கு நேற்று (06) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் அங்கு விளக்கேற்றி பெற்றோரை நினைவு கூர்ந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago