Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Janu / 2023 ஜூலை 09 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம் மதுபாவனையில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார். அக்கூட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் வாய் திறக்காமல் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதன்பின் பல்வேறு சர்ச்சைகளும் தோன்றி மறைந்தன. டயகம பிரதேசம் என்பது மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும் போக்குவரத்து, சுகாதாரம் ,கல்வி பாதை ,வீடமைப்பு என பல்வேறு குறைகளை சுற்றி காட்ட முடியும்.
இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் பொருளாதார பிரச்சனையில் இருக்கும் இம்மக்களின் மத்தியில் மற்றுமொரு பிரச்சன என்பது மது சாலையாகும்.
ஏற்கனவே இந்த நகரத்தில் இரண்டு மதுபான சாலைகள் காணப்படுகிறது.அதிகமான குடும்பங்களில் தொடர்ச்சியாக மது பாவனையால் ஏற்படும் பாரதூரமான பிரச்சனைகள் தொடர்பாக டயகம பொலிஸ் நிலையத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன.
இருந்தாலும் தற்போது இவ்வாறான பிரச்சனை காரணமாக சிறுவர்கள் மத்தியிலும் பாரிய பிரச்சனைகள் எழுந்துள்ளதுடன் அவர்களால் கல்வி கற்க முடியாத சூழ்நிலையும் குடும்பங்களில் தோன்றியுள்ளது.
அண்மையில் இந்த நகரத்துக்கு அரசியல்வாதிகளில் செல்வாக்குடன் புதிய மதுபான கடை ஒன்று திறப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில் மிக விரைவில் மது சாலை திறப்பதாக தகவல் பரவியதையடுத்து மக்கள் பல்வேறு கோணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் பாடசாலை மாணவர்கள் தங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதில் 150 மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி பதாகைகள் ஏந்தியவாறு கறுப்பு உடையில் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
அத்தோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வீதி நாடகத்தினையும் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் நகரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு புதிதாக மதுபான சாலை திறக்கும் இடம் வரை சென்று அவ்விடத்தில் கோஷங்களை எழுப்பி தமது கண்டனத் தனையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
துவாரக்ஷான் ,ஆ.ரமேஸ் , பி.கேதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago