2025 மார்ச் 13, வியாழக்கிழமை

சோள அறுவடை விழா

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கலப்பின சோளப்பயிர் அறுவடை வயல்விழா இன்று(19) வவவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்றது. 

குறைந்தளவான நிலப்பரப்பில் அதிகளவில் பயிரிக்கூடிய குறித்த சோளம் பரீட்சாத்த முறையாக செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் விதைகள் வழங்கப்பட்டு திணைக்களத்தின் மேற்பார்வையில் விவசாயிகள் ஊடாக பயிரிடப்பட்டிருந்தது. 

இதன் அறுவடை விழா இன்று(19) புளியங்குளத்தில் சோளம் பயிரிட்ட தேவராசா என்ற விவசாயியின் தோட்டத்தில்  இடம்பெற்றதுடன் ஏனைய விவசாயிகளுக்கும் குறித்த சோளன் பயிரிடும் முறை அதன் பயன்கள் தொடர்பிலும் தெளிவூட்டல்கள் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனையின் பாடவிதான உத்தியோகத்தர்களான அ. சுஜேந்திரா மற்றும் கு. கஜேந்திரன் உட்பட கிராம சேவகர் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .