Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கோவிந்த் கிரிஜி மஹாராஜ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு புதன்கிழமை (24) வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அவரை ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் கலாச்சார இசை நடன சிகழ்வும் மங்கள வாத்தியம் முழங்கவும் ஆலய பரிபாலன சபையினரால் ஊர்வலமாக ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது நுவரெலியா பிளக்பூல் சென் அன்தனிஸ் மாணவர்களால் மலர் தூவி வரவேற்கப்பட்டார். தொடர்ந்து காயத்திரி பீடம் பாவரசா நர்த்தனாலயா மாணவர்களின் வரவேற்று நடனம் இடம்பெற்று வரவேற்கப்பட்டார்.
தொடர்ந்து சுவாமி வருகையை நினைவு கூறும் முகமாக நினைவு கல்வெட்டு ஒன்றை திரை நீக்கம் செய்துவைத்ததுடன் விசேட பூஜைகளை தலைமையேற்று நடாத்தினார்.
டி.ஷங்கீதன், ஆ.ரமேஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago
9 hours ago